கைது செய்ய சென்ற இந்திய பொலிஸாரை சரமாரியாக தாக்கிய 100 நைஜீரியர்கள்!
இந்திய தலைநகர் டெல்லியில் நைஜீரிய நாட்டவர் மூவரை கைது செய்ய முயன்றபோது, நூற்றுக்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசா காலம் முடிவு
டெல்லியின் நேப் சராய் பகுதியில் மூன்று நைஜீரியர்கள் விசா காலம் முடிந்து தங்கியிருப்பது பொலிஸாருக்கு தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்ய டெல்லி பொலிஸார் அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு சென்றனர். ஆனால், அங்கு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் மொத்தமாக திரண்டு பொலிஸாரை தடுத்தனர்.
பொலிஸாரை தாக்கிய நைஜீரியர்கள்
அவர்களில் சிலர் பொலிஸாரை தாக்கினர். அந்த சமயத்தை பயன்படுத்தி இரண்டு நைஜீரியர்கள் தப்பி ஓடிவிட்டனர். எனினும், ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை ஒரு பெண் உட்பட மேலும் 4 நைஜீரியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது வருகிறது.