காங்கோ ஜனநாயகக் குடியரசில் சுரங்கம் இடிந்து விபத்து - 200க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
காங்கோ ஜனநாயகக் குடியரசில் சுரங்கம் இடிந்து விபத்தில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
200க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
மத்திய ஆப்பிரிக்கா நாடான கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் ருபயா கோல்டன் சுரங்கம்(Rubaya Coldan mine) உள்ளது. உலகின் 15% கோல்டன் உற்பத்தி ருபயாவில் நடை பெறுகிறது.

கோல்டன் வெப்பத்தை எதிர்க்கும் உலோகமான டான்டலமாக(tantalum) மாற்றப்படுகிறது. இதற்கு மொபைல் போன்கள், கணினிகள் மற்றும் விண்வெளி பாகங்கள் தயாரிப்பாளர்களிடையே அதிக தேவை உள்ளது.
இந்த பகுதியானது, 2024 ஆம் ஆண்டு முதல் M23 என்னும் கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில், சுரங்க தொழிலார்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் M23 கிளர்ச்சியாளர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் லுமும்பா கம்பேரே முயிசா தெரிவித்துள்ளார்.

சுரங்கத்திற்குள் இன்னும் மக்கள் சிக்கியிருப்பதாக நம்பப்படுவதாக கைவினைஞர் சுரங்கத் தொழிலாளியான ஃபிராங்க் பொலிங்கோ தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான ருவாண்டா அரசாங்கத்தின் ஆதரவுடன், அதன் கிளர்ச்சிக்கு நிதியளிக்க M23 கிளர்ச்சிக்குழு ருபாயாவின் செல்வங்களை கொள்ளையடிப்பதாக ஐ.நா குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் ருவாண்டா இதனை மறுத்துள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசு கனிம வளமிக்க நாடாக இருந்தபோதிலும், 70 சதவீதத்திற்கும் அதிகமான காங்கோ மக்கள் ஒரு நாளைக்கு 2.15 டொலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |