சூடானில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள்: 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு
More than 300 People killed in Sudan Drone attacks: சூடானில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சூடானில் ட்ரோன் தாக்குதல்
சூடானில் ராணுவத்தினருக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் தீவிரமடைந்துள்ளது.
அதன் ஒருப்பகுதியாக மேற்கு கோர்டோஃபான்(West Kordofan) மற்றும் அபியே(Abyei) ஆகிய இரண்டு பகுதிகளில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்கு கோர்டோஃபான் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 150 பேர் வரை கொல்லப்பட்டதாக சூடான் போர் கண்காணிப்பகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களில் பலர், உயிரிழந்தவர்களின் துக்க நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து திங்கட்கிழமை சூடான் மற்றும் தெற்கு சூடான் பகுதிக்கு இடைப்பட்ட எண்ணெய் வளம் அதிகம் கொண்ட அபியே பகுதியில் உள்ள பரபரப்பான சந்தையை குறிவைத்து நடத்தப்பட்ட மற்றொரு ட்ரோன் தாக்குதலில் 153 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
அபியேவில் அமைந்துள்ள இந்த சந்தை துணை ராணுவ படையினரின் எண்ணெய் விநியோக மையமாக இருந்து வருவதால் இந்த தாக்குதலை சூடான் இராணுவத்தினரே நடத்தியதாக இராணுவ உயர் அதிகாரி ஒருவர் BBC செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சூடானுக்கு வெளிநாட்டு ஆயுதங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்த போதிலும், தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து அதிநவீன ஆளில்லா விமானங்கள் இரண்டு தரப்பினருக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூடானில் மோதலை தொடர்ந்து விரிவடைய செய்து வருவது குறிப்பிடத்தக்கது.