ஒரே நாளில் 700-க்கும் அதிகமானோர் பலி! கொரோனாவின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கிய நாடு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தொற்று மற்றும் இறப்பு எண்னிக்கை பயங்கரமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸால் புதிதாக 89,129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது கடந்த 6 மாதங்களில் பதிவாகியுள்ள மிக உயர்ந்த ஒரு நாள் பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 714 இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்முலம் இந்தியாவின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 164,110-ஆகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,392,260-ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 658,909-ஆக உயர்ந்தது.
நேற்று 44,202 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட நிலையில், மொத்த மீட்பு எண்ணிக்கை இப்போது 11,569,241-ஆக உள்ளது.
நாட்டில் இதுவரை 7,30,54,295 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.
