முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இந்த வார இறுதியில் மீண்டும் தொடங்கக்கூடும் என்ற நிலையில், அமெரிக்கா வரும் நாட்களில் மத்திய கிழக்குக்குக் கூடுதல் படைகளை அனுப்பவுள்ளது.
ஏப்ரல் 22-ஆம் திகதியுடன்
தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெலியானத் தகவலின் அடிப்படையில், USS George H.W. Bush விமானம் தாங்கி கப்பலில் உள்ள 6,000 வீரர்களும், போர்க்கப்பல்களுடன் கூடிய Boxer Amphibious Ready Group-இல் உள்ள சுமார் 4,200 கடற்படை மற்றும் மரைன் வீரர்களும்,

அவர்களுடன் இணைக்கப்பட்டுள்ள 11-வது மரைன் படைப்பிரிவும் இம்மாத இறுதிக்குள் மத்திய கிழக்கு பகுதிக்கு சென்றடையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய இரண்டு வார கால போர்நிறுத்தம் ஏப்ரல் 22-ஆம் திகதியுடன் முடிவடைய உள்ள நிலையில், ஈரானை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ள, சுமார் 50,000 பேர் கொண்ட படைப்பிரிவுடன் இந்தப் புதிய துருப்புகள் இணையவுள்ளன.
இதனிடையே, பங்குச்சந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வழக்கம் போல ஈரானில் போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், போர் முடிவுக்கு வந்தவுடன் எரிபொருள் விலைகள் மிகவும் குறையும் என்றும் அவர் ஃபாக்ஸ் பிசினஸ் ஊடகத்திடம் தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே 21 மணி நேரம் நீண்ட உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களுக்குக் கடற்படை முற்றுகையிடுவதாக ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
தொடர அனுமதிக்காது
இதற்கிடையில், ஈரானிய துறைமுகங்கள் மீதான தற்போதைய அமெரிக்க கடற்படை முற்றுகையானது, போர் நிறுத்த மீறலுக்கு ஒரு முன்னுரையாக அமைகிறது என்று ஈரானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இஸ்லாமியக் குடியரசின் வலிமைமிக்க ஆயுதப் படைகள், பாரசீக வளைகுடா, ஓமான் கடல் மற்றும் செங்கடல் ஆகிய பகுதிகளில் எந்தவொரு ஏற்றுமதி அல்லது இறக்குமதியும் தொடர அனுமதிக்காது என்றும் எச்சரித்துள்ளது.

ஈரானில் போர் தொடங்கியதிலிருந்து, தங்களது எண்ணெய் மற்றும் பொருட்களை ஹார்முஸ் நீரிணை வழியாகத் தடையின்றி அனுப்பி வருகிறது; அதே சமயம், மற்ற நாடுகளிலிருந்து, குறிப்பாக ஈரானை ஆதரிக்காத நாடுகளிலிருந்து வரும் கடல்வழிப் போக்குவரத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |