இரும்புசத்து நிறைந்த முருங்கை இலை துவையல்.., எப்படி செய்வது?
முருங்கை இலைகளை தினமும் உணவில் எடுத்துக்கொண்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.
இதுமட்டுமில்லாமல் முடி வளர்ச்சியை அதிகரிக்க, நரைமுடி மறைய மற்றும் உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
அந்தவகையில், இரும்புசத்து நிறைந்த முருங்கை இலை துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடலை பருப்பு- 2 ஸ்பூன்
- கொத்தமல்லி விதை- 1 ஸ்பூன்
- சீரகம்- ½ ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 10
- பூண்டு- 10 பல்
- காய்ந்த மிளகாய்- 6
- புளி- சிறிதளவு
- தக்காளி- 1
- முருங்கை இலை- 2 கைப்பிடி
- கொத்தமல்லி- சிறிதளவு
- கறிவேப்பிலை- 2 கொத்து
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, கொத்தமல்லி விதை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் இதில் காய்ந்த மிளகாய், புளி, தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

அடுத்து இதில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை இலை, கொத்தமல்ல, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
இதற்கடுத்து இவற்றை நன்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக எண்ணெய்யில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால் ஆரோக்கியமான முருங்கை இலை துவையல் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |