சிறுவன் Rayan உயிரிழப்பு.., கடும் துயரத்தில் மொராக்கோ..
மொராக்கோவில் கிட்டத்தட்ட 5 நாட்களாக 104 அடியில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியிருந்த ஐந்து வயது சிறுவன் Rayanசடலமாக மட்கப்பட்டதால் நாடே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
மொராக்கோவின் Chefchaouen மாநிலத்தில் உள்ள ஹிக்ரான் கிராமத்தை சேர்ந்த Rayan என்ற 5 வயது சிறுவன் கடந்த 1-ஆம் திகதி (செவ்வாய்கிழமை) மாலையில் 100 அடி (32 மீற்றர்) ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
அதனைத் தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக இரவும் பகலும் சிறுவனை மீட்கும்பணி நடந்தது.
நேராக கிணற்றின் வழியாக ரயனை மீட்க வழியில்லாததால், புதன்கிழமையிலிருந்து கிணற்றின் பக்கவாட்டில் சிறுவன் இருக்கும் ஆழம் வரை ராட்ச கிரேன்களைகே கொண்டு செங்குத்தாக பள்ளம் தோண்டப்பட்டது.
பின்னர் 10 மீட்டர் இருக்க, அதிலுருந்து மீட்பு பணியாளர்களால் கைகளால் சிறுவன் இருக்கும் இடத்தை நோக்கி நேராக குழி வெட்டப்பட்டது.
இந்த முயற்சியில், உள்ளூர் நேரப்படி 9.30 மணியளவில் சிறுவன் மீட்கப்பட்டான். உடனடியாக, மீட்கப்பட்டவுடன் தயாராக வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
சிறுவனின் உடல்நிலை குறித்தது சரியான விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், Rayan சடலமாகவே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.