4 நாட்களாக ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கித் தவிக்கும் சிறுவன்! நாட்டையே கலங்கவைத்துள்ள சம்பவம்..

Boy Child Rescue Morocco Well Trap Rayan Chefchaouen
By Ragavan Feb 04, 2022 05:15 PM GMT
Report

மொராக்கோவில் 100 அடி கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்ற கிட்டத்தட்ட 4 நாட்களாக மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் Chefchaouen மாநிலத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

Rayan என்று அடையாளப்படுத்தப்பட்ட 5 வயதே ஆகும் அந்த சிறுவன், கடந்த செவ்வாக்கிழமை (பிப்ரவரி 01) மாலை 100 அடி (30 மீட்டர்) ஆழமுள்ள ஒரு ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

குழந்தை அழும் குரல் கேட்டதையடுத்து, கிணற்றுக்குள் சிறுவன் விழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

4 நாட்களாக ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கித் தவிக்கும் சிறுவன்! நாட்டையே கலங்கவைத்துள்ள சம்பவம்.. | Morocco Child Trapped Well Rayan Chefchaouen Boy

தகவல் அறிந்து வந்த மொராக்கோ மீட்புக் குழுவினர் புதன், வியாழன் என 48 மணிநேரங்களுக்கும் மேலாக சிறுவனை செங்குத்தாக மீட்க முயற்சித்தனர்.

கிணறு 32 மீட்டர் ஆழம் கொண்டது மற்றும் மேலே 45cm (18 அங்குலம்) விட்டத்தில் இருக்கும் அந்த கிணறு கீழே இறங்க இறங்க சுருங்கியுள்ளதாகவும், அதன் காரணமாக குழந்தையை மீட்க மீட்பவர்கள் கீழே செல்ல முடியாது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், இன்று கிணற்றின் பக்கவாட்டில் பிரம்மாண்ட இயந்திரங்களைக் கொண்டு, நேராக சிறுவன் இருக்கும் தூரம் வரை பாரிய பள்ளத்தை தோண்டி வருகின்றனர்.

4 நாட்களாக ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கித் தவிக்கும் சிறுவன்! நாட்டையே கலங்கவைத்துள்ள சம்பவம்.. | Morocco Child Trapped Well Rayan Chefchaouen Boy

தற்போதைய நிலையில், பக்கவாட்டில் கிணறு தோன்றும் திட்டத்தின்படி, கிட்டத்தட்ட சிறுவனை நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் ஜெண்டர்மேரியில் இருந்து ஒரு மருத்துவ ஹெலிகாப்டர் மற்றும் சுகாதார அமைச்சின் மறுமலர்ச்சியில் நிபுணர்களான மருத்துவ ஊழியர்கள் குழந்தை வெளியே இழுக்கப்படும் போது சம்பவ இடத்தில் தயார் நிலையில் உள்ளனர்.

ஐந்து புல்டோசர்கள் சம்பவ இடத்தில் தோண்டி வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சிறுவன் உயிருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும், கிணற்றுக்குள் கமெரா அனுப்பப்பட்டு கண்காணிக்கப்பட்டுவரும் நிலையில், சில புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் வெளியாகியுள்ளன.

அதிகாரிகள் கிணற்றுக்கு உணவு மற்றும் தண்ணீரை அனுப்பியதாகவும், தனது மகன் சிறிது தண்ணீர் குடிப்பதை மேலிருந்து வீடியோவில் கண்டதாகவும் சிறுவனின் தந்தை கூறியுள்ளார். 

GalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US