அட்லாண்டிக் சிங்கம் எங்கள் கோலி: அல் ஹிலால் அணி நிர்வாகம் பெருமையுடன் வெளியிட்ட தகவல்
ஸ்பெயின் அணியான செவில்லாவில் இருந்து யாசின் பௌனௌவை மூன்று வருட ஒப்பந்தத்தில் அல் ஹிலால் அணி நிர்வாகம் இணைத்துக் கொண்டுள்ளது.
21 மில்லியன் யூரோ
பிரேசில் கால்பந்து உச்ச நட்சத்திரம் நெய்மர் ஜூனியரை அடுத்து தற்போது மொராக்கோ கோல்கீப்பரான யாசின் பௌனௌவை இணைத்துக் கொண்டு தங்கள் அணியை வலுப்படுத்தியுள்ளது அல் ஹிலால்.
??? ???????? ???? ?? ??? ??????
— AlHilal Saudi Club (@Alhilal_EN) August 17, 2023
✋?⚽️??#AlHilal ?#BONO_HILALI pic.twitter.com/iVVXZIrtev
ஒப்பந்தத்தின் விதிமுறைகள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஸ்பெயின் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், 21 மில்லியன் யூரோ தொகையை வழங்க அல் ஹிலால் அணி நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக கூறுகின்றனர்.
32 வயதான பௌனௌ செவில்லா அணியின் முதன்மையான கோல்கீப்பர் என செயல்பட்டார். மட்டுமின்றி ஸ்பெயின் அணி இரண்டு யூரோபா லீக் பட்டங்களை வெல்ல உதவியதுடன் கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த உலகக் கோப்பை அரையிறுதிக்கு மொராக்கோ அணி முன்னேறவும் உதவினார்.
அட்லாண்டிக் சிங்கம்
போனோ என பொதுவாக அறியப்படும் இவரை ரியல் மாட்ரிட் மற்றும் பேயர்ன் முனிச் ஆகிய அணிகள் தங்கள் அணியில் இணைத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்ட்டதாக கூறப்படுகிறது.
@AP
தற்போது 21 மில்லியன் யூரோ தொகைக்கு தங்கள் அணியில் இணைத்துக் கொண்டுள்ள அல் ஹிலால் நிர்வாகம், இந்த அட்லாண்டிக் சிங்கம் எங்கள் கோலி என்றும் பெருமையுடன் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |