நெய்மரை 800 கோடிக்கு ஒப்பந்தம் செய்த அணி? வெளியான தகவல்
PSGயின் நட்சத்திர வீரர் நெய்மரை, சவுதி கிளப் அணியான அல் ஹிலால் 800 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நட்சத்திர வீரர்
பாரிஸ் செயின்ட் ஜேர்மன் அணியில் இருந்து மெஸ்ஸி வெளியேறிய நிலையில், எம்பாப்பே மற்றும் நெய்மர் முதன்மை வீரர்களாக உள்ளனர்.
Getty
ஆனாலும் அணியை விட்டு வெளியேறுவதாக எம்பாப்பே அறிவித்த நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு PSG தரப்பில் இருந்து வெளியாகவில்லை.
இந்த நிலையில் தான் மற்றொரு நட்சத்திரமான நெய்மரை, சவுதி கிளப்பான அல் ஹிலால் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
AFP
90 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம்
PSG அணியுடன் 90 மில்லியன் யூரோவுக்கு அவரை ஒப்பந்தம் செய்துகொண்டதாக ஆதாரங்கள் ESPNயிடம் கூறியுள்ளன.
பிரேசிலின் மிரட்டல் வீரரான நெய்மர், அல் ஹிலாலுடனான தனிப்பட்ட நிபந்தனைகளை ஒப்புக்கொள்வதற்கு நெருக்கமாக இருப்பதாகவும், அவர் 2 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் இணைவார் என்றும் ஞாயிற்றுக்கிழமை ESPN செய்தி வெளியிட்டது.
PSG அணியில் அடிக்கடி காயங்கள் மற்றும் Off field சிக்கல்களால் போராடி வந்த நெய்மரின் ஆறு ஆண்டுகால கிளப் (PSG) பயணம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |