நல்ல வாழ்வை எதிர்பார்த்து ஸ்பெயினுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோர்: ஒரு திடுக் தகவல்
Young girls living alone on Ceuta's streets at risk of abuse: செயூட்டாவின் தெருக்களில் தனியாக வாழும் பதின்ம வயதுப் பெண் பிள்ளைகள் சீரழிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
மொராக்கோ நாட்டவர்கள் சுமார் 60,000 பேர் ஸ்பெயினுக்கு சொந்தமான பகுதி ஒன்றிற்குள் நுழைந்ததைக் கண்டு ஐரோப்பாவே பதறிய விடயம் நினைவிருக்கலாம்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்...
மொராக்கோ நாட்டவர்களான சுமார் 60,000 பேர், கடந்த மாத இறுதியில், ஸ்பெயினுக்கு சொந்தமான சியூட்டா என்னும் நகருக்குள் நுழைந்தனர்.

உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சியூட்டாவுக்குள் நுழைய, ஸ்பெயினுக்குள் நுழைந்தவர்கள் நம் நாட்டுக்குள்ளும் வந்துவிடுவார்களோ என மற்ற ஐரோப்பிய நாடுகள் பதறின.
ஆனால், சியூட்டாவுக்குள் நுழைந்த சில மணி நேரத்துக்குள், சுமார் 50,000 பேர் மீண்டும் தங்கள் சொந்த நாடான மொராக்கோவுக்கே திரும்பிவிட்டதாக பின்னர் செய்திகள் வெளியாகின.
ஒரு திடுக் தகவல்
விடயம் என்னவென்றால், இன்னும் ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டவர்கள் சியூட்டாவில்தான் இருக்கிறார்கள்.
அவர்களில் சுமார் 3,000 முதல் 5,000 பேர், பெற்றோரில்லாமல் தனியாக இருக்கும் பதின்ம வயது பிள்ளைகள்.

மோசமான செய்தி என்னவென்றால், இந்தப் பிள்ளைகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் தொடர்பில் வெளியாகிவரும் மோசமான செய்திகளிலிருந்து, ஒரு நல்ல வாழ்வுக்காக உயிரை பணயம் வைத்து வந்த இடத்திலும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என தெரியவந்துள்ள விடயம், நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.
அதாவது, சியூட்டாவில் இந்த மொராக்கோ நாட்டவர்களுக்கு டாய்லெட் வசதியே இல்லை.
ஆக, பிள்ளைகள் இயற்கை உபாதையை தீர்க்கச் செல்லும் இடங்களில் அவர்கள் வன்புணரப்படுவதாக அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
சியூட்டா பல்கலை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவரான சூசன்னா (Susana Ascaso), தான் அத்தகைய பல பிள்ளைகளுக்கு சிகிச்சையளித்ததாக தெரிவிக்கிறார்.
12 வயதுச் சிறுமி ஒருத்தி பயந்து நடுங்கியபடி தன்னைக் காண வந்ததாக தெரிவிக்கும் சூசன்னா, அந்தப் பிள்ளை தன்னை பலர் தவறாக தொட்டதாகவும், தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் தெரிவிக்கிறார்.
அவ்வழியே சென்ற பெண்ணொருவர் அந்தப் பிள்ளையைக் காப்பாற்றி மருத்துவரிடம் அழைத்துவந்துள்ளார்.
சியூட்டாவில் இளம்பெண்களுக்கு, குறிப்பாக 18 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளுக்கு அபாயம் அதிகம் என்கிறார் சூசன்னா.
இந்நிலையில், பெற்றோர் உடன் இல்லாமல் தனியாக இருக்கும் பிள்ளைகளை, குறிப்பாக பெண் பிள்ளைகள் சுமார் 500 பேரை ஸ்பெயினுக்குக் கொண்டு செல்ல ஸ்பெயின் புலம்பெயர்தல் மற்றும் இளைஞர் பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.
அவர்களை அரசு காப்பகங்களில் தங்கவைக்க திட்டமிட்டுவருவதாக ஸ்பெயின் புலம்பெயர்தல் அமைச்சரான எல்மா (Elma Saiz) தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |