மொராக்கோ சிறுவன் Rayan சடலம் மீட்கப்பட்ட நிமிடங்களில் நடந்தது என்ன? கசிந்த சில தகவல்கள்..
சிறுவன் Rayan சடலமாக மீட்கப்பட்ட நிமிடங்களில் நடந்த சில விடயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொராக்கோவில் 104 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் கிட்டத்தட்ட 4 நாட்களாக சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சமபவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட அந்த சில நிமிடங்களில் நடந்த விடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அசோசியேட் பிரஸ் தகவல்களின்படி, சிறுவன் Rayan மீட்கப்பட்டபோது, தங்க நிற துணியால் போர்த்தப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டுள்ளார்.
அதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, சிறுவனின் பெற்றோர் இருவரும் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் தகவல்களின்படி, மீட்புப் படையினர் சிறுவனை அடைவதற்குள், அவர் இறந்துவிட்டதாக இரண்டு அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுவன் உயிரிழந்தது மொராக்கோ நாட்டின் மன்னர் ஆறாம் மொகமதுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், சிறுவன் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர், மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்ததாகவும், அவனது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.