FIFA மகளிர் உலகக்கோப்பை 2023: வரலாறு படைத்த மொராக்கோ பெண்கள் அணி!
FIFA மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக மொராக்கோ ரவுண்டு ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
வரலாறு படைத்த மொராக்கோ பெண்கள் அணி
உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் ஜேர்மனியிடம் தோல்வியடைந்த மொராக்கோ அணி கொலம்பியாவை வீழ்த்தி மீண்டும் ஒரு பாரிய மீட்சியைக் கண்டது.
கொலம்பியா ஆதிக்கம் செலுத்திய இந்த ஆட்டத்தில், முதல் பாதியின் 49வது நிமிடத்தில் மொராக்கோவின் சிஸ்லான் செபக்கின் பெனால்டியை கொலம்பிய கோல் கீப்பர் காப்பாற்றினார். ஆனால் ரீபவுண்டை கோலாக மாற்றிய அனிசா லஹ்மரி (Anissa Lahmari) மொராக்கோவின் நாயகி ஆனார்.
Getty Images
மொராக்கோ கோல் கீப்பரும் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார், இரண்டாவது பாதியில் கொலம்பிய அணியை முந்நீர் விடாமல் பாதுகாத்தார்.
பெண்கள் உலகக் கோப்பையில் மொராக்கோ நாக் அவுட் கட்டத்தை எட்டியது இதுவே முதல் முறையாகும்.
கடைசிவரை கோல் அடிக்க திணறிய கொலம்பியா
59வது நிமிடத்தில் கொலம்பியாவிற்காக டானிலா மொன்டோயா கோஅல் அடிக்க முயற்சி செய்தார், ஆனால் மொராக்கோ கீப்பர் கதிஜா எர்மிச்சி அவரது முயற்சியைத் தடுத்தார். அடுத்த 20 நிமிடங்களில் கொலம்பியாவுக்கு பல வாய்ப்புகள் கிடைத்தாலும் கோல் அடிக்க முடியவில்லை.
FoxSports
தோல்வியுற்ற போதிலும், கொலம்பியா குரூப் எச் பிரிவில் முதலிடம் பிடித்து 16வது இடத்தைப் பிடித்தது.
Round Of 16-ல் கொலம்பியா ஜமைக்காவையும், மொராக்கோ பிரான்சையும் எதிர்கொள்கிறது.
வரலாற்றில் முதல்முறையாக மூன்று ஆப்பிரிக்க நாடுகள்
இதனிடையே, FIFA மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக நைஜீரியா, மொராக்கோ, தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகள் ரவுண்டு ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
FIFA Women's World Cup, FIFA 2023 Womens World Cup, World Cup 2023, Morocco, Morocco Colombia