இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? கோபமான மொசாப் யூசப்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து இஸ்ரேல் உளவு அமைப்பில் பணியாற்றிய, ஹமாஸ் இணை நிறுவனர் ஹசன் யூசுப்பின் மகன் மொசாப் யூசப் பேசியுள்ளார்.
இஸ்ரேலை கைவிடுகிறாதா அமெரிக்கா?
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்த போரில் ஏராளமான அமெரிக்கா வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலுக்காக அமெரிக்கா ஏன் இந்த போரில் ஈடுபட வேண்டும் என போரை நிறுத்த அமெரிக்காவில் டிரம்ப்பிற்கு கடும் அழுத்தம் உருவானது.
அதேவேளையில், ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
ஆனால், ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து கடுமையான தாக்குதலை தொடுக்க வேண்டுமென இஸ்ரேல் வலியுறுத்திய நிலையில், தற்போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
டிரம்ப்பின் காசா அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்தது அவர் மீதான கோபத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் உளவு அமைப்பில் பணியாற்றி, தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ஹமாஸ் இணை நிறுவனர் ஹசன் யூசுப்பின் மகன் மொசாப் ஹசன் யூசப், ஜெருசலேமில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஈரான் உடனான போரில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்தும், இஸ்ரேல் அமெரிக்கா இடையே உள்ள உறவு குறித்தும் சற்று ஆவசேமாக பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |