அவுஸ்திரேலியாவிற்கு தலைவலி கொடுத்த வீரர்: 285 ரன் இலக்கு நிர்ணயம்
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 284 ஓட்டங்கள் குவித்தது.
தன்ஸித், ஷாண்டோ கூட்டணி
வங்காளதேசம் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்ய, வங்காளதேசம் முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
சைப் ஹசன் 5 ஓட்டங்களில் வெளியேற, தன்ஸித் ஹசன் மற்றும் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கூட்டணி அதிரடியாக ஓட்டங்கள் சேர்த்தது.
இந்தக் கூட்டணி, இரண்டாவது விக்கெட்டுக்கு 96 ஓட்டங்கள் குவித்தது. அரைசதம் அடித்த தன்ஸித் ஹசன் (Tanzid Hasan) 54 (44) ஓட்டங்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த லித்தன் தாஸ் 7 ஓட்டங்களில் அவுட் ஆக, ஷாண்டோ 67 ஓட்டங்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.

மொஸாடெக் ஹொசைன் சரவெடி
எனினும் மொஸாடெக் ஹொசைன் (Mosaddek Hossain) அதிரடி ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவிற்கு நெருக்கடி கொடுத்தார்.
மறுமுனையில் விக்கெட்டுகள் சரிய, மொஸாடெக் ஹொசைன் தனியாளாக சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டினார். இதன்மூலம் வங்காளதேச அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ஓட்டங்கள் குவித்தது.
மொஸாடெக் ஹொசைன் 70 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் விளாசினார். தஸ்கின் அகமது 20 (16) ஓட்டங்கள் எடுத்தார்.
நேதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளும், லியாம் ஸ்கோட் மற்றும் மேட் ரென்ஷா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |