மே.தீவுகளுக்கு எதிரான தொடரை வென்ற இலங்கை அணி: மகிழ்ச்சியுடன் பேசிய குசல் மெண்டிஸ்
இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது.
மழையால் கைவிடப்பட்ட போட்டி
இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நேற்று நடைபெற இருந்த 3வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஏற்கனவே இரண்டாவது போட்டியும் இதேபோல் கைவிடப்பட்டது.
முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி வெற்றி பெற்றிருந்ததால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
சிறப்பாக செயல்பட்டோம்
வெற்றிக் கிண்ணத்தை பெற்ற பின் பேசிய அணித்தலைவர் குசல் மெண்டிஸ், "முதலாவதாக நாங்கள் தொடரை வென்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
நாங்கள் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினோம்; ஆனால் அந்தப் போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்டோம். துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் ஆகிய மூன்றிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். அதனால்தான் நாங்கள் தொடரை வென்றோம்" என தெரிவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |