மாஸ்கோ தாக்குதலுக்கு IS தான் காரணம்! அமெரிக்காவின் கூற்றை மறுக்கும் ரஷ்யா
மாஸ்கோ நகரில் நடந்த தாக்குதல் விவகாரம், தற்போது ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே இன்னொரு சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
மாஸ்கோ நகரில் நடந்த தாக்குதல்
ரஷ்யாவின் மாஸ்கோவில் ள்ள குரோகஸ் சிட்டி ஹாலில்(Moscow's Crocus City Hall) திடீரென புகுந்த ஆயுதம் ஏந்திய நபர் சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் இந்த தாக்குதலுக்கு எங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் உக்ரைன்(Ukraine) தெரிவித்துள்ளது.
அதே சமயம் தாக்குதலுக்கு ISIS-K பொறுப்பு ஏற்றுக் கொண்ட நிலையில், அமெரிக்க உளவுத்துறையும் இந்தக் கூற்றை ஆதரிக்கிறது.
அமெரிக்காவின் கூற்றை மறுக்கும் ரஷ்யா
இந்நிலையில் தாக்குதலுக்கு IS தான் காரணம் என்ற அமெரிக்காவின்(US) கூற்றை ரஷ்யா மறுத்துள்ளது. மேலும் தங்கள் கூற்றை மீண்டும் சிந்தித்துப் பாருங்கள் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவின்(Russia) செய்திதாள் ஒன்றில் எழுதிய வெளியுறவு அமைச்சக பேச்சுவார்த்தையாளர் மரியா ஜகாரோவா(Maria Zakharova), "கவனம் - வெள்ளை மாளிகைக்கான கேள்வி: இது நிச்சயமாக ஐ.எஸ். தானா? இது பற்றி மீண்டும் சிந்திப்பீர்களா?" என்று கேட்டுள்ளார்.
கீவ்வில் பாதுகாப்புப் படை இருப்பதால், அமெரிக்கா IS என்ற "பேய்" மூலம் தன்னை மறைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் ஜகாரோவா குற்றம் சாட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |