தேசத்துரோகக் குற்றவாளி: 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த ரஷ்ய நீதிமன்றம்
போலந்திற்காக உளவு பார்த்ததாக இளைஞர் ஒருவருக்கு ரஷ்ய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலந்திற்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
போலந்திற்காக உளவு
2022-யில் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ஜார்ஜி பிரோகோ என்ற ரஷ்ய இளைஞர், தொழில்துறை மலையேறுபவராக பணியாற்றுவதற்காக ஜார்ஜியாவிற்கு இடம்பெயர்ந்தார்.
அதன் பின்னர் 2024ஆம் ஆண்டில் அவர், உஸ்பெகிஸ்தானுக்கு ஒரு வணிகப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவர் காணாமல்போனதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், மாஸ்கோவின் மாட்ரோஸ்காயா திஷினா முன்விசாரணை தடுப்புக்காவல் நிலையத்தில் அவர் மீண்டும் தென்பட்டார். போலந்து நாட்டிற்காக உளவு பார்த்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
23 ஆண்டுகள் சிறைத்தண்டனை
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஒருவர், பிரோகோவிற்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.
மேலும், அவருக்கு தண்டனையுடன் 800,000 ரூபிள்கள் அபராதமும் விதிக்கப்பட்டதாக FSB பாதுகாப்பு சேவை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
செய்தி நிறுவனமான TASS வெளியிட்ட FSB வீடியோவில் பிராகோவின் விசாரணை காட்டப்பட்டது. அப்போது அவர் போலந்து உளவுத்துறையுடன் இணைந்து பணியாற்றியதை ஒப்புக்கொண்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |