ரஷ்யாவில் உளவு பார்த்த பிரித்தானிய தூதர்?நாட்டை விட்டு வெளியேற 14 நாட்கள் கெடு
உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் பிரித்தானிய தூதரை ரஷ்யா வெளியேற்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய தூதர் வெளியேற உத்தரவு
ரஷ்யாவுக்கான பிரித்தானிய தூதர் ஒருவர் ரகசிய உளவு வேலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த திடீர் சம்பவத்தால் பிரித்தானியா மற்றும் ரஷ்யா இடையிலான இராஜதந்திர உறவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரித்தானிய தூதரின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பதுடன் 14 நாட்களில் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.

தூதரின் தவறான நடவடிக்கைகள்
குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரித்தானிய தூதர் விசா விண்ணப்பத்தின் போது தவறான அடையாளங்களை வழங்கி இருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை FSB குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் முறைசாரா சந்திப்புகள் மூலம் ரஷ்ய பொருளாதாரம் குறித்த தரவுகளை திரட்ட முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ரஷ்யாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்டதாகவும் அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் எச்சரிக்கையும் லண்டனின் மறுப்பும்
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரஷ்ய வெளியுறவுத்துறை பிரித்தானிய தூதரக அதிகாரி டேனே தோலாக்கியாவை நேரில் அழைத்து கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆனால், ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டை பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் மறுத்து இருப்பதுடன், ரஷ்யாவின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது மற்றும் உள்நோக்கம் கொண்டது என்று லண்டன் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |