200 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு: ரஷ்ய தலைநகர் மக்கள் கடும் அவதி
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 200 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
200 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தின் வானிலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவலில், தலைநகர் மாஸ்கோவை கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத கடும் பனிப்புயல் தாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த மோசமான பனிப்பொழிவு காரணமாக கிட்டத்தட்ட 1.3 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

நகரத்தின் சில பகுதிகளில் பனிப்பொழிவு 60 சென்டிமீட்டர்(2 அடி உயரத்துக்கு) எட்டியுள்ளது.
முக்கிய பாதிப்புகள்
நகரின் மையப் பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மாஸ்கோ நகரத்தின் போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆயிரக்கணக்கான வாகனங்கள் அவதிப்பட்டு வருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |