ரஷ்யாவிற்குள் புகுந்த உக்ரைனிய படைகள்: அமைதியான மக்களை அச்சுறுத்துவதாக மாஸ்கோ குற்றச்சாட்டு!
உக்ரைனிய படைகள் ரஷ்யாவிற்குள் 30 கிலோமீட்டர் வரை உட்புகுந்து இருப்பதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்குள் ஊடுருவிய உக்ரைன்
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கையின் சமீபத்திய முன்னேற்றமாக, உக்ரைனிய படைகள் ரஷ்யாவிற்குள் 30 கிலோமீட்டர் வரை உட்புகுந்துள்ளனர்.
2022 முதல் இதுவரையிலான போர் நடவடிக்கையில் இது உக்ரைனின் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்துள்ள தகவலில், உக்ரைனிய படைகளுடன் குர்ஸ்க் பகுதியில் 6வது நாளாக தடுப்பு தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், டோல்பினோ(Tolpino) மற்றும் ஒப்ஷி கோலோடெஸ்(Obshchy Kolodez) ஆகிய கிராமங்களில் உக்ரைனிய படைகள் தற்போது ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் Maria Zakharova, உக்ரைன் அமைதியாக வாழும் ரஷ்ய மக்களை அச்சுறுத்துகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்முறையாக ஜெலென்ஸ்கி அறிவிப்பு
ரஷ்யாவுடனான 2 ஆண்டுகால போர் நடவடிக்கையில் முதல் முறையாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யா மீதான நேரடி தாக்குதலை அங்கீகரித்துள்ளார், மேலும் எதிரிகளின் நிலப்பரப்பிற்குள் போரை உக்ரைனிய வீரர்கள் தள்ளியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரவு நேர உரையில், உக்ரைனால் நீதியை மீட்டெடுக்கவும், ஆக்கிரமிப்பாளர் மீதான அழுத்தத்தை அதிகரிக்கவும் முடிவும் என்பதை நிரூபித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |