உலகிலேயே பயங்கரமான உயிரினம் எது தெரியுமா?
உலகிலேயே பயங்கரமான உயிரினம் எது என்று கேட்டால், சுறாக்கள், விஷப்பாம்புகள், முதலைகள் போன்ற விலங்குகள் பயங்கரமானவை என்று பல உயிரினங்களைக் கூறலாம்..
ஆனால், உண்மையில் பயங்கரமான உயிரினம் கொசுதான் என்கிறார் அறிவியலாளர் ஒருவர்.
உலகிலேயே பயங்கரமான உயிரினம்
கொசுதான் உலகிலேயே பயங்கரமான உயிரினம் என அவர் கூறக் காரணம், அந்தக் கொசுவால் பரப்பப்படும் நோய்கள்!
ஆம், மலேரியா, டெங்கு, சிக்குன்குன்யா, ஸிகா மற்றும் மஞ்சள் காய்ச்சல் என பலவித பயங்கர நோய்கள் இந்த கொசுக்களால் பரவுகின்றன.
2023ஆம் ஆண்டில் மட்டும், உலகம் முழுவதும் 597,000 பேர் மலேரியாவால் உயிரிழந்துள்ளார்கள்.
அதேபோல, ஆண்டுக்கு 400 மில்லியன் பேர் டெங்கு ஜூரத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் 20,000 முதல் 40,000 பேர் உயிரிழக்கிறார்கள்.
குறிப்பாக, வெப்பம் அதிகமான ஆப்பிரிக்க நாடுகளில்தான் ஏராளமானோர் இந்த கொசுக்களால் பரவும் நோய்களால் உயிரிழக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |