கொசு விரட்டும் மருந்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணம்! அதிர்ச்சி சம்பவம்
சென்னையை அடுத்த மணலி பகுதியில் கொசு விரட்டும் மருந்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மூச்சுத்திணறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெலிவரி வேலை பார்க்கும் நபர்
மணலி எம்எம்டிஏ குறுக்கு தெருவில் வசிப்பர் உடையார். இவர் ஒன்லைன் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார்.
அண்மையில் விபத்தில் சிக்கியதால் உடையார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது மனைவியும் உடன் தங்கியிருந்து கவனித்துக் கொள்வதால், உடையாரின் 3 பிள்ளைகளும் பாட்டி சந்தானலட்சுமியின் கவனிப்பில் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த நால்வரும் உறங்கியுள்ளனர். அப்போது கொசு விரட்டும் திரவ இயந்திரம் ON-யில் இருந்துள்ளது.
மூச்சுத்திணறி மரணம்
ஒரு கட்டத்தில் இயந்திரம் சூடாகி உருகியதால், அது அட்டைப்பெட்டியின் மீது விழுந்து தீப்பிடித்து வீடு முழுவதும் புகைமூட்டமாக மாறியுள்ளது.
இதில் மூச்சுத்திணறி பாட்டி சந்தானலட்சுமி, பேத்திகள் சந்தியா (10), ரக்ஷிதா (8), சந்தான பவித்ரா (7) ஆகிய நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் நால்வரின் உடல்களையும் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ROBERT KÖRNER/GETTY IMAGES
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |