பூச்சிகளே இல்லாத நாடொன்றில் முதன்முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு
பூச்சிகளே இல்லாத நாடொன்றில் முதன்முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், வெப்பநிலை அதிகரிப்பே அதற்குக் காரணம் என்று கூறியுள்ளார்கள் அறிவியலாளர்கள்!
முதன்முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு
உலகிலேயே அண்டார்டிக் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய இரண்டு நாடுகள்தான் பூச்சிகளே இல்லாத நாடு என அறியப்படுகின்றன.
இந்நிலையில், ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஐஸ்லாந்தின் தலைநகரான Reykjavíkக்கு 30 கிலோமீற்றர் வடக்கே அமைந்துள்ள Kidafell என்னுமிடத்தில், மூன்று கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவை Culiseta annulata என்னும் சிற்றினத்தைச் சேர்ந்த கொசுக்கள் ஆகும். இந்த தகவலை ஐஸ்லாந்தின் தேசிய இயற்கை அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த கொசுக்கள் எப்படி ஐஸ்லாந்தை வந்தடைந்தன என்பது தெரியவில்லை என்று கூறும் அறிவியலாளர்கள், அவை ஏதாவது கப்பல் மூலம் ஐஸ்லாந்தை வந்தடைந்திருக்கலாம் என கருதுகிறார்கள்.
இதற்கிடையில், அந்த கொசுக்களைக் கண்டுபிடித்த Björn Hjaltason என்பவர், தான் மூன்று அபூர்வ பூச்சிகளைக் கண்டுபிடித்துள்ளதாக பேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.
பின் அவற்றை அவர் ஐஸ்லாந்திலுள்ள தேசிய வரலாற்று நிறுவனத்துக்கு அனுப்ப, அவர்கள் Björn Hjaltason கண்டுபிடித்த பூச்சிகள் கொசுக்கள் என்பதை உறுதி செய்துள்ளார்கள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |