புதிய வரலாறு படைத்த 2026 ஐபிஎல் தொடர்: அதிக 200 ஓட்டங்கள் கடந்து சாதனை
அதிக 200 ஓட்டங்களை கடந்த ஐபிஎல் தொடர் என்ற பெருமையை 2026 ம் ஆண்டு ஐபிஎல் தொடர் படைத்துள்ளது.
அதிரடியான IPL சீசன்
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நடைபெற்று வருகிறது. இதுவரை 60 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளது.
இந்த ஆண்டு பெரும்பாலான அணிகள் இந்த முறை 200 ஓட்டங்களை சாதாரணமாக அடைந்து வருகின்றன எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அணிகள் 250 ஓட்டங்கள் என்ற இலக்கையும் வெற்றிகரமாக சேஸ் செய்து அசத்தி வருகின்றனர்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி
அதிக 200 ஓட்டங்கள்
இன்று மதியம் நடைபெற்ற 61 வது லீக் போட்டியில் கூட பெங்களூரு அணி 222 ஓட்டங்களை குவித்துள்ளது.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக 200 ஓட்டங்களை கடந்த தொடராக 2026 ம் ஆண்டு ஐபிஎல் உருவெடுத்துள்ளது.
நடைபெற்று முடிந்துள்ள இதுவரையிலான லீக் போட்டிகளில் மட்டும் 53 முறை 200 ஓட்டங்கள் அடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு 18 முறையும், 2023ம் ஆண்டு 37 முறையும், 24ம் ஆண்டு 41 முறையும், 2025ம் ஆண்டு 52 முறையும் 200 ஓட்டங்களுக்கு மேல் அடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |