தன்பாலின தொடர்பில் கொடூரம்... சுவிஸில் வெளிநாட்டவர் கொலை
சூரிச் நகரில் போர்த்துகீசிய சிகையலங்கார கலைஞர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரேசில் நாட்டவருக்கு 12 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 41 வயதான அந்த நபரை 13 ஆண்டுகள் நாட்டைவிட்டு வெளியேற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டுமின்றி, கொல்லப்பட்ட போர்த்துகீசிய சிகையலங்கார கலைஞரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு இழப்பீடாக 20,000 பிராங்குகள் வழங்கவும் தீர்ப்பாகியுள்ளது.
குற்றவாளி சம்பவத்தின் போது போதை மருந்துக்கு உட்பட்டிருந்ததால் 12 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் மட்டும் தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அவர் சுயநினைவுடன் இருந்து கொலை செய்திருந்தால் 19 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொடூரமான முறையில் சிதைக்கப்பட்ட சடலத்தில் சுமார் 40 காயங்கள் இருந்ததை தடயவியல் மருத்துவர் பதிவு செய்துள்ளார். இதனால் குற்றவாளி மிகக் கொடூரமாகவும் இரக்கமின்றியும் சம்பவத்தின் போது நடந்து கொண்டுள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கொலக்கான காரணம் வெளியிடப்படவில்லை. ஆனால் குற்றவாளி அதிக போதை மருந்தை பயன்படுத்தியிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது. மட்டுமின்றி, கொலைக்கு பின்னர் தடயங்களை அவர் திட்டமிட்டு சேதப்படுத்தியதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு நவம்பர் 1ம் திகதி சூரிச் பகுதியில் ஹொட்டல் அறை ஒன்றில், தொடர்புடைய இருவரும் அதிகாலையில் சந்தித்துக்கொண்டுள்ளனர். இருவரும் போதை மருந்தை உட்கொண்டதுடன், உறவிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஒருகட்டத்தில் 41 வயதான பிரேசில் நாட்டவர் வன்முறையில் இறங்கியதாகவும், போர்த்துகல் நாட்டவரை கொடூரமாக தாக்கவும் செய்துள்ளார்.
மட்டுமின்றி, கத்தியால் மிகவும் கொடூரமாக தாக்கவும் செய்துள்ளார். இதில் போர்த்துகல் நாட்டவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.