பூமியில் மிகவும் ஆபத்தான பொருள்... 5 நிமிடங்கள் பார்த்தால் இரண்டே நாளில் மரணம் உறுதி
நம்பவே முடியாத தகவல் என்றாலும், உண்மையில் மிகவும் ஆபத்தான ஒரு பொருள், அதைப் பார்த்தால் கூட நீங்கள் கொல்லப்படலாம்.
திடப்படுத்தப்பட்டக் குழம்பு
வெறும் 300 நொடிகள் அந்தப் பொருளுடன் ஒரு அறைக்குள் தங்க நேர்ந்தால், இரண்டே நாளில் மரணம் உறுதி. அது வேறொன்றுமல்ல, தற்போதைய உக்ரைனில் அமைந்துள்ள செர்னோபில் அணு உலையின் உருகிய மையத்திலிருந்து 2மீ அகலத்தில் உருவான திடப்படுத்தப்பட்ட எரிமலைக் குழம்பு தான் அது.
அதன் கடுமையான கதிர்வீச்சு காரணமாக இதுவரை மிகக் குறைவான புகைப்படங்களே பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து 40 ஆண்டுகளுக்கு பின்னரும், அந்தப் பொருளுடன் ஒரு அறைக்குள் சென்றால், மரணம் உறுதி என்பதுடன், அந்த அச்சுறுத்தல் இன்னும் பல நூற்றாண்டுகளாக நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
உக்ரைனில் அமைந்துள்ள செர்னோபில் அணு உலையின் நான்காவது உலையில் கடந்த 1986, ஏப்ரல் 26ம் திகதி திடீரென்று எதிர்பாராத மின் எழுச்சி ஏற்பட்டது. அவசர நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிய, வெப்பத்தின் அளவும் அதன் உச்சத்திற்கு சென்றது.
அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட அனைத்து அவசரகால நடவடிக்கைகளும் தோல்வியடைய, ஒருகட்டத்தில் மனித வரலாற்றில் மிக மோசமான அணுசக்தி பேரழிவாக செர்னோபில் அணு உலை மாறியது.
சுமார் 1,000 மடங்கு அதிகம்
அத்துடன், அந்த அணு உலையின் கீழ் இருக்கும் ஒரு அறையானது பூமியின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் ஒன்றாக மாறியது. அதில் இருந்து வெளியான புதிய பொருளுக்கு கோரியம் என பெயரிடப்பட்டது.
அதன் ஒருபகுதி தற்போது Elephant's Foot என அறியப்படுகிறது. அதுவே தற்போது பூமியிலேயே மிகவும் ஆபத்தான பொருளாக உருமாறியுள்ளது. 1986ல் இந்த Elephant's Foot-ல் இருந்து வெளியான கதிர்வீச்சின் அளவு மணிக்கு 10,000 roentgens என கூறப்பட்டது.
ஒருவருக்கு புற்றுநோயை ஏற்படுத்துவதற்கு தேவையான அளவை விட சுமார் 1,000 மடங்கு அதிகம். வெறும் 30 நொடிகள் அதன் அருகே சென்றால், ஒரு வாரத்தில் மயக்கம் மற்றும் சோர்வு ஏற்படும்.
அதனுடன் 2 நிமிடங்கள் ஒரு அறையில் செலவிட்டால், செல்களில் இரத்தப்போக்கு ஏற்படும், 4 நிமிடங்கள் என்றால் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படும். 5 நிமிடங்கள் என்றால், இரண்டே நாளில் மரணம் உறுதி என்றே நிபுணர்கள் கூற்றாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |