உலகின் மிக விலையுயர்ந்த மதுபானம்.., ஒரு பாட்டில் எத்தனை கோடி தெரியுமா?
உலகின் மிக விலையுயர்ந்த விஸ்கி sabella's Islay தான், அதன் விலை இந்திய மதிப்பில் கோடிகளில் விற்கப்படுகிறது.
Isabella's Islay Original விஸ்கி, Luxury Beverage Company என்ற இங்கிலாந்து நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
மேலும், இந்த விஸ்கி மால்ட் செய்யப்பட்ட பார்லி மாஷிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த விஸ்கியின் இவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்க உண்மையான காரணம் அதன் பாட்டில்தான்.
English crystalஆல் ஆன இந்த பாட்டில் 8500க்கும் மேற்பட்ட வைரங்கள், 300 ரூபிகள் மற்றும் வெள்ளை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த பாட்டிலில் உள்ள எழுத்துக்கள் கூட வைரங்களால் ஆனது. மேலும் இதை வாங்குபவரின் பெயருடன் வடிவமைத்துக் கொள்ளலாம்.
மேலும், இதன் முன்பக்கத்தில் உள்ள சிவப்பு எழுத்துகளும் ரூபிகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாங்கும் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு ஆடம்பரமான மரப்பெட்டியில் வருவதால் அதன் ஆடம்பரத்தை மேலும் மேலும் அதிகப்படுத்துகிறது.
இந்த மரப்பெட்டி பிரிட்டிஷ் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்டு அழகாக செதுக்கப்பட்டது.
Isabella's Islayன் 750ml விஸ்கியின்ஒரு பாட்டிலின் விலை சுமார் ரூ. 52 கோடி. மேலும், ஒரு 30ml பெக் வாங்கினால் ரூ. 2 கோடிக்கு மேல் செலவாகும்.
இதை அருந்துபவர்கள் வெண்ணெய் மற்றும் வறுக்கப்பட்ட மர புகை சுவை , பார்லி மற்றும் மென்மையான உணர்வை அனுபவிப்பார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |