ரூ 7,400 கோடியை மொத்தமாக அள்ளிக்கொடுத்த வள்ளல்... கட்டுமான நிறுவன அதிபர்: யாரிந்த சிங்
போர்ப்ஸ் பத்திரிகையானது 17வது ஆண்டின் பெரும் நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட்டதில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
மொத்த சொத்து மதிப்பு 14.3 பில்லியன்
DLF கட்டுமான நிறுவனத்தின் முன்னாள் தலைவரான குஷால் பால் சிங் என்பவரே அந்த நபர். தனது தனிப்பட்ட சேமிப்பு அல்லது சொத்தில் இருந்தே குஷால் பால் சிங் பெருந்தொகையை நன்கொடையாக அளித்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தில் தமக்கிருந்த நேரடி பங்குகளை விற்பனை செய்துள்ளதன் மூலமாக குஷால் பால் சிங் 89 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளார்.
2020ல் உருவாக்கப்பட்ட கேபி சிங் அறக்கட்டளை சார்பில் தொண்டு நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டே அந்த தொகையை அவர் திரட்டியுள்ளார். தற்போது 92 வயதாகும் குஷால் பால் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு என்பது 14.3 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
DLF கட்டுமான நிறுவனத்தின் அசுர வளர்ச்சி, தொழில்நுட்ப மையமாக குர்கானின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு ஒரே காரணம் குஷால் பால் சிங் என்றே கூறப்படுகிறது. 1931ல் பிறந்த குஷால் பால் சிங், மீரட் கல்லூரியில் அறிவியலில் பட்டம் பெற்றார்.
8வது பெரும் கோடீஸ்வரர்
பின்னர், இங்கிலாந்தில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படித்தார். அத்துடன்,பிரித்தானிய அதிகாரிகள் சேவைகள் தெரிவு வாரியம் மூலமாக இந்திய இராணுவத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
1961ல் ராணுவத்தில் இருந்து வெளியேறிய குஷால் பால் சிங், 1946ல் தமது மாமனாரால் உருவாக்கப்பட்ட DLF கட்டுமான நிறுவனத்தில் இணைந்தார். தொடர்ந்து விவசாயிகளிடம் இருந்து நிலத்தை வாங்கிய சிங், குர்கானில் DLF சிட்டியை உருவாக்கினார்.
50 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் 2020 ஜூன மாதம் DLF நிறுவனத்தில் இருந்து ஓய்வை அறிவித்தார். குஷால் பால் சிங் தனது பதவிக் காலத்தில், குர்கானில் ஏராளமான பூகம்பத்தை எதிர்க்கும் வணிக கட்டிடங்கள், குடியிருப்புகள், சில்லறை விற்பனை மையங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களை கட்டினார்.
தாயாரிடம் ரூ 10,000 கடன் வாங்கி உருவாக்கிய நிறுவனம்... தற்போது இவரது சொத்து மதிப்பு 3.5 பில்லியன் டொலர்
2008ல் உலகிலேயே 8வது பெரும் கோடீஸ்வரர் என போர்ப்ஸ் பத்திரிகை இவரை அடையாளப்படுத்தியது. இதுவரை தமது தனிப்பட்ட முறையிலும் கேபி சிங் அறக்கட்டளை சார்பாகவும் ரூ 7,406 கோடி அளவுக்கு நன்கொடைகளை குஷால் பால் சிங் முன்னெடுத்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |