உலகின் மிகவும் பிரபலமான தலைவர் யார்? செல்வாக்கை இழந்துவரும் ட்ரூடோ, மக்ரோன், பைடன்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உலகின் மிகவும் பிரபலமான தலைவராக மாறியுள்ளார்.
மார்னிங் கன்சல்ட் (Morning Consult) என்ற உலகளாவிய முடிவு நுண்ணறிவு நிறுவனம் (decision intelligence firm) உலகின் 25 நாடுகளின் தலைவர்களின் அங்கீகார மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி (Narendra Modi) 69% மதிப்பீட்டில் முதலிடத்தில் உள்ளார்.
மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் (Andres Manuel Lopez Obrador) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது ஒப்புதல் மதிப்பீடு 60%.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) டாப்-10 தலைவர்களில் கூட இடம்பெறவில்லை. அவர் 39% அங்கீகாரத்துடன் 12வது இடத்தில் இருந்தார்.
அதே சமயம் 25வது அதாவது கடைசி இடம் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு கிடைத்தது. அவரது மதிப்பீடு 16%.
திருமணத்திற்கு முன் மணமகனின் வலிமையை சோதிக்கும் மணமகளின் தாய்.! ஆப்பிரிக்க பழங்குடியினரின் விசித்திரமான வழக்கம்
முன்னதாக பிப்ரவரியில், பிரதமர் மோடி 78% ஒப்புதல் மதிப்பீட்டில் உலகின் மிகவும் பிரபலமான தலைவராக இருந்தார்.
மார்னிங் கன்சல்ட்டின் இந்த கணக்கெடுப்பு ஜனவரி 30 முதல் பிப்ரவரி 5 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. அப்போதும் மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் இரண்டாவது இடத்தில் இருந்தார். அவரது மதிப்பீடு 64%.
செல்வாக்கை இழந்துவரும் ட்ரூடோ, மக்ரோன், பைடன்..!
ஜோ பைடன் 39% அங்கீகாரத்துடன் 12 வது இடத்தில் உள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) 29% ஒப்புதல் மதிப்பீட்டில் 20வது இடத்தையும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) 20% ஒப்புதல் மதிப்பீட்டில் 22வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இதிலிருந்து இந்த மூன்று தலைவர்களின் செல்வாக்கு குறைந்து வருகிறது என்று கூறலாம்.
7-நாள் கருத்துக்கணிப்பில் தீர்மானிக்கப்படும் ஒப்புதல் மதிப்பீடு
உலகளாவிய தலைவர் ஒப்புதல் மதிப்பீடு கண்காணிப்பாளர் வலைத்தளமான மார்னிங் கன்சல்ட்டின் படி, ஜூலை 8 மற்றும் 14-க்கு இடையில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை கணக்கெடுத்த பிறகு, சராசரியாக ஏழு நாட்களுக்கு ஒப்புதல் மதிப்பீடு தீர்மானிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Narendra Modi, Emmanuel macron, Justin, Trudeau, Joe Biden, Keir Starmer, Giorgia Meloni