உலகின் சக்திவாய்ந்த ராணுவங்கள் கொண்ட நாடுகளின் பட்டியல்.., இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
சக்திவாய்ந்த ராணுவங்களின் பட்டியல்
ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் திறன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் ஒரு நாட்டினுடைய பாதுகாப்பு தொழில்நுட்பம், நிதி வளங்கள், தளவாடங்கள், புவியியல் மற்றும் மூலோபாய இருப்பிடம் உள்ளிட்ட 60 காரணிகளை வைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
முதல் 10 இடங்கள்
1. அமெரிக்கா
2. ரஷ்யா
3. சீனா
4. இந்தியா
5. தென் கொரியா
6. இங்கிலாந்து
7. பிரான்ஸ்
8. ஜப்பான்
9. துருக்கி
10. இத்தாலி
இந்தியாவின் பலம்
சக்திவாய்ந்த ராணுவங்களின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து ஆறாவது முறையாக 4-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்திய ராணுவத்தில் மொத்தம் 14 லட்சத்து 55 ஆயிரத்து 550 வீரர்கள் உள்ளனர். மேலும், 11,55,000 ரிசர்வ் வீரர்களும் உள்ளனர்.
அதேபோல, டி-90 பீஷ்மா மற்றும் அர்ஜுன் டாங்கிகள், பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் பினாகா ராக்கெட் அமைப்பு ஆகிய ஆயுதங்கள் உள்ளன.
இந்திய விமான படையை பொறுத்தவரை 600 போர் விமானங்கள், 899 ஹெலிகாப்டர்கள், 831 துணை விமானங்கள் உட்பட 2,229 விமானங்கள் உள்ளன.
இந்திய கடற்படையில் 150 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |