உலகின் அழகான காதல் நகரங்கள்: எங்கெல்லாம் உள்ளன தெரியுமா?
உலகளவில் காதலர்களுக்காகவே சிறப்பு வாய்ந்த நகரங்களாக உள்ள சில இடங்கள் குறித்து இங்கே காண்போம்.
பிப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்களில் ஒரு சிலர் கொண்டாட்டங்களுக்காக பல இடங்களை தேடி செல்வதும் உண்டு. அதுபோன்ற உலகின் சிறந்த காதல் நகரங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
நயாகரா அருவி (Niagara Falls)
கனடாவின் ஒன்டாரியோ மற்றும் அமெரிக்காவில் நியூயார்க் மாநிலங்களை எல்லையாக கொண்டு அமைந்துள்ளது நயாகரா அருவி.
1800களில் தேனிலவு செல்லும் பழக்கம் தொடங்கப்பட்டது. அப்போது முதல் நயாகரா அருவி உலகின் தேனிலவு தலைநகரம் என்று மாறியது.
மௌய் (Maui)
அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயின் ஒரு தீவுதான் மௌய் (Maui). இது ஹவாயில் உள்ள இரண்டாவது பெரிய தீவு தேசமாகும். மிகவும் சுவாரஸ்யமான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்ட மௌய், சிறந்த சுற்றுலா இடமாக உள்ளது.
அதேபோல் சூரிய உதயம், ஹெலிகொப்டர் சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றுக்கும் ஏற்றதாக மௌய் இருப்பதால், சிறந்த காதல் இடமாக உள்ளது.
சாண்டோரினி (Santorini)
கிரீஸ் நாட்டின் சாண்டோரினி பாரம்பரிய வெள்ளைக் கட்டடங்கள், அழகிய கடற்கரைகளை கொண்டுள்ளது.
அதேபோல் சூரிய அஸ்தமனம் அழகாக காட்சியளிப்பதால் சிறந்த காதல் இடமாக பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கு குன்றின் கிராமங்களில் ஒரு காதல் நடைப்பயணத்தையும், ஏஜியன் கடலின் பார்வையுடன் கிரேக்க உணவையும் அனுபவிக்கவும், ஓய்வெடுக்க படகு பயணமும் மேற்கொள்ளலாம்.
வெனிஸ் (Venice)
மிதவை நகரம் என்று அழைக்கப்படும் இடம் வெனிஸ். இத்தாலியில் உள்ள இந்நகரம் நீரினால் சூழ்ந்துள்ளது.
அழகான கால்வாய்கள், கவர்ச்சிகரமான இடங்களைக் கொண்ட வசீகரமான இடம்தான் வெனிஸ். எனவே, காதலர் தினத்தை இங்கே சிறப்பாக கொண்டாடலாம்.
ப்ராக் (Prague)
செக் குடியரசு நாட்டின் மிகவும் அழகான நகரமாக உள்ளது ப்ராக். இதனாலேயே உங்கள் துணையுடன் இங்கு சென்று வரலாம்.
இந்நகரம் இரவு வெளிச்சத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கும். ப்ராக்கில் சார்லஸ் பாலம், கேபிள் கார் சவாரி, பெட்ரின் கார்டன்ஸ், அருவிகள் என பல இடங்கள் சுற்றிப்பார்க்க இங்கு உள்ளன.
பாரிஸ் (Paris)
காதல் நகரம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது "பாரிஸ்" நகரம்தான். பிரான்சின் "City of Love" என்றே இது அழைக்கப்படுகிறது.
Seine நதிக்கரையில் மெழுகுவர்த்தியால் அலங்கரிக்கப்பட்ட Candle light இரவு உணவை தங்கள் துணையுடன் உட்கொள்ளலாம்.
ஈபிள் கோபுரத்தைப் பார்த்து ரசிப்பதுடன், தங்கள் துணையுடன் நின்று அங்கே புகைப்படம் எடுத்துக் கொள்வதும் மகிழ்ச்சியான உணர்வை தரும்.
அதேபோல் இந்நகரில் உள்ள அழகிய தோட்டங்கள் வழியாக உலா வருவதால் காதலுக்கு ஏற்ற இடமாக பாரிஸ் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |