100 அடி உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த குழந்தை... காப்பாற்ற முயன்ற தாய்க்கு நேர்ந்த கதி
அமெரிக்காவில், 100 அடி உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சி ஒன்றில் குழந்தை ஒன்று தவறி விழ, அதைக் காப்பாற்ற முயன்ற தாயும் வழுக்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Portland என்ற இடத்துக்கு அருகில் அமைந்துள்ள Multnomah நீர்வீழ்ச்சிக்கு, Olivia என்றபெண்ணும் அவரது 2 வயது மகளான Katieயும் சென்றிருந்த நிலையில், நீர்வீழ்ச்சியின் மேல் கட்டப்பட்டிருந்த பாலத்திலிருந்து குழந்தை தவறி விழுந்திருக்கிறாள்.
குழந்தை விழுவதைக் கண்ட தாய் அதை எட்டிப் பிடிக்க முயல, அவரும் வழுக்கி சுமார் 100 அடி உயரத்திலிருந்து தண்ணீருக்குள் விழுந்துள்ளார்கள்.
விழுந்ததில் Oliviaக்கு கால் எலும்பு முறிந்துள்ளது. அதுபோக, முகத்திலும் வயிற்றிலும் பலமாக அடிபட்ட நிலையிலும் அவர், என் குழந்தையைக் காப்பாற்றுங்கள் என சத்தமிட்டிருக்கிறார்.
சத்தத்தைக் கேட்ட அங்கிருந்த ஏராளமானோர் உடனடியாக உதவிக்கு விரைந்திருக்கிறார்கள்.
அப்போது குளியலறை ஒன்றில் குளித்துக்கொண்டிருந்த Shane Roundy என்பவர், வெளியே ஏதோ சத்தம் கேட்பதைக் கவனித்து வெளியே ஓடிவந்திருகிறார். விடயமறிந்ததும், சட்டென தண்ணீருக்குள் குதித்த Shane, முதலில் குழந்தையைத் தண்ணீரிலிருந்து தூக்கி எடுத்துவிட்டு, Oliviaவிடம், பயப்படாதேயுங்கள், நான் உங்களைக் காப்பாற்றத் திரும்பி வருவேன் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.
Oliviaவோ, என் குழந்தையைக் காப்பாற்றுங்கள் அது போதும் என்றே திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்.
குழந்தை Katieயை தன் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு, Oliviaவைக் காப்பாற்றச் சென்றிருக்கிறார் Shane.
அதற்குள் அங்கிருந்த பலர் தங்களால் இயன்ற உதவியைச் செய்திருக்கிறார்கள். சிலர், தங்கள் உடையைக் கழற்றி குழந்தையை மூடி குளிரிலிருந்து காப்பாற்ற முயல, வேறு சிலர், பக்கத்திலுள்ள கடைகளுக்குச் சென்று போர்வைகள் வாங்கி வந்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், அங்கிருந்த மருத்துவ உதவிக்குழுவில் பணியாற்றும் ஒருவரும் வந்து தாயையும் மகளையும் பதுகாப்பான நிலையில் வைத்திருக்க, ஒருவர் அவசர உதவியை அழைக்க, அனைத்தும் பரபரவெவென்று நிகழ்ந்துள்ளன.
சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வர, தாயும் மகளும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். இருவரும் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என தகவல் கிடைத்துள்ளது.