சேற்றில் சிக்கிய மகனை காப்பாற்ற இறங்கிய தாய்..இறுதியில் நேர்ந்த சோகம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் ஏரியில் மூழ்கி தாய், மகன் உட்பட மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஏரியில் குளித்த சிறுவன்
கர்நாடக மாவட்டம் மண்டியாவின் வலகெரேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜு. இவரது மனைவி சைலஜா (30), மகன் தேஜஸ் (11).
நேற்றைய தினம் சைலஜா தனது மகனுடன் கால்நடை மேய்ச்சலுக்காக எரிப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சீனிவாஸ் என்பவரின் 15 வயது மகன் யோதனும் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது யோதனும், தேஜஸும் குளிப்பதற்காக ஏரியில் இறங்கியுள்ளனர். ஆனால் இருவரும் சேற்றில் சிக்கித் தத்தளித்தனர்.
காப்பாற்ற முயன்ற தாய்
இதனைக் கண்ட சைலஜா அதிர்ச்சியில் உறைந்தார். உடனே அவர்களைக் காப்பாற்ற அவர் ஏரியில் குதித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக அவரும் சேற்றில் சிக்கிக் கொண்டார்.
ஏரியில் மூவரும் தத்தளிப்பதைப் பார்த்த சிலர் ஓடி வந்து அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Representative imageFile
பொலிஸார் விசாரணை
அதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
@iStock