பேத்தியை வளர்க்க ரூ.45 லட்சம் இழப்பீடு கேட்ட தாய்: மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு
Mother demands 45 lakhs for raising granddaughter in China: சீனாவில் 15 ஆண்டுகள் பேத்தியை வளர்த்தற்காக மகனிடம் ரூ.45 லட்சம் கேட்டு தாய் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பேத்தியை வளர்த்ததற்கு ஊதியம் கேட்ட பாட்டி
சீனாவின் கிழக்கு பகுதியில் வாழும் 60 வயது மதிக்கத்தக்க “சு”(Xu) என்ற பெண், தன்னுடைய மகன் லியாங் என்பவர் மீது ஷாங்காய் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அதில், கடந்த 2014ம் ஆண்டு தன்னுடைய மகன் லியாங் அவருடைய மனைவியை பிரிந்தார். இதையடுத்து மகன் லியானும், அவரது 4 வயது மகளையும் சேர்த்து கவனித்து வந்தேன்.
லியாங் அவனுடைய மகளை பராமரிக்கும் மொத்த கடமையையும் என்னிடமே ஒப்படைத்தார்.

நானும் கடந்த 15 ஆண்டுகளாக தன்னுடைய பேத்தியின் அன்றாட செலவுகள், மருத்துவ மற்றும் கல்வி கட்டணங்கள் என அனைத்தையும் என்னுடைய சொந்த பணத்தில் கவனித்து வந்தேன்.
ஆனால் லியாங் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவனுடைய மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
மகளை மட்டும் தன்னிடமே விட்டு விட்டுச் சென்றுவிட்டார். இப்போது நான் பொருளாதார நெருக்கடியினாலும், முதுமையாலும் பாதிக்கப்பட்டுள்ளேன்.
என்னுடைய மகனுக்கு குடும்ப பொறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லை. ஒரு தந்தையாக அவனது கடமையை செய்ய தவறி விட்டான்.
இனிமேலும் என்னால் அவனுடைய பண உதவி இல்லாமல் பேத்தியை கவனித்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் 15 ஆண்டுகளாக பேத்தியை பராமரித்ததற்காக 3,60,000 யுவான் தொகையை கட்டணமாக என்னுடைய மகன் வழங்க வேண்டும் என்றும் தாய் “சு” நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தாயின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இருந்த மகன் லியாங், அப்போது தனக்கு மாதம் வெறும் ரூ.37000 மட்டுமே ஊதியமாக இருந்ததாகவும், தன்னுடைய சக்தி உட்பட்டு அனைத்து உதவிகளையும் தன்னுடைய மகளுக்கு செய்ததாக தெரிவித்தார்.
சட்ட நிபுணர்களின் கருத்து
தாய் “சு” தொடர்ந்த வழக்கு தொடர்பாக ஷாங்காய் சட்ட வல்லுநகர்கள் வழங்கிய தகவலில், இது குடும்ப உறவுகளை வியாபாரமாக்குவது அல்ல, மாறாக குடும்ப பொறுப்புகளை தெளிவுபடுத்தும் ஒன்று என தெரிவித்துள்ளனர்.
குழந்தையை வளர்க்கும் பொறுப்பு முதலில் பெற்றோர்களுடையது, பின்னர் அவர்களால் முடியவில்லை என்றால் தான் தாத்தா-பாட்டிகள் தங்களது உதவிகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |