BMW சாரதியால் கொல்லப்பட்ட தாயார்... பிரித்தானியாவில் சம்பவம்
பிரித்தானியாவில் BMW சாரதி ஒருவரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தாயார் ஒருவரின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம்
லெய்செஸ்டர் சிட்டி சென்டர் அருகே ஜூன் 24 அன்று நடந்த ஒரு போக்குவரத்து விபத்தைத் தொடர்ந்து, 23 வயதான மைக்கேல் சுவுமேகாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 56 வயதான நிலா படேல் மரணமடைந்தார்.
சம்பவத்தை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் 48 மணி நேரத்திற்குப் பிறகு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, மரணத்திற்கான காரணம் தலையில் ஏற்பட்ட காயம் எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து கொலை வழக்குப் பதியப்பட்ட அந்த சாரதி, காணொளி ஊடாக நீதிமன்ற விசாரணையில் கலந்துகொண்டார். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், வகுப்பு B போதை மருந்துகளை வழங்கும் நோக்கத்துடன் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அத்துடன் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் உள்ளிட்ட மேலும் சில வழக்குகளும் அந்த சாரதி மீது சுமத்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி, ஜூன் 24 அதிகாலையில் லண்டனில் ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உடல் ரீதியான தீங்கு விளைவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
படேலுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது மகன் ஜெய்டன் மற்றும் மகள் டானிகா, இதுவரை சந்திக்க முடியாத மிகவும் அன்பான மனிதர்களில் ஒருவர் என்று அவரை வர்ணித்தனர்.
அவர் எப்போதும் தன்னை விட மற்றவர்களை முதன்மையாகக் கருதினார், எதையும் எதிர்பாராமல் ஆறுதல் கூறுபவர். வாழ்க்கை கடினமாக இருந்தபோதும், அவர் வலிமையுடனும், கண்ணியத்துடனும், முகத்தில் புன்னகையுடனும் முன்னேறினார் என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |