திடீரென மாரடைப்பால் உயிரிழந்த தாய்.., வணங்கி விட்டு தேர்வு எழுத சென்ற 12-ம் வகுப்பு மாணவி
திடீரென தாய் உயிரிழந்த நிலையில் கதறி அழுதபடியே அவரை வணங்கிவிட்டு 12-ம் வகுப்பு மாணவி பொதுத்தேர்வு எழுத சென்றுள்ளார்.
திடீரென தாய் உயிரிழப்பு
தமிழக மாவட்டமான தஞ்சாவூர், ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ராஜேந்திரன் மற்றும் கலா. இவர்களது மூன்றாவது மகள் காவியா அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், மாணவியின் தாய் கலா இன்று காலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மாணவி காவியாவுக்கு இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையிலும், அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்றுவிட்டு கதறி அழுதபடியே தேர்வு எழுத சென்றுள்ளார். சக மாணவர்கள் சேர்ந்து அவரை ஆறுதல் படுத்தினர்.
இதுகுறித்து காவியா கூறுகையில், "நான் ஒவ்வொரு முறை தேர்வு எழுத செல்லும் போதும் அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு தான் செல்வேன். நன்றாக படிக்க வேண்டும் என்று அவர் கூறுவார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |