பசிபிக் கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்! எந்தவொரு மருத்துவ உதவியும் பெறாத ஆச்சரியம்
37 வயதான பெண்ணொருவர் பசிபிக் கடலில் குழந்தை பெற்றுள்ள ஆச்சரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய அமெரிக்காவில் உள்ள நாடான நிக்கராகுவாவை சேர்ந்தவர் ஜோசி புக்கெர்ட் (37). இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நான்காவது முறை கர்ப்பமானார்.
இந்நிலையில் சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் ஜோசி. குழந்தையை பசிபிக் கடலில் அவர் யார் உதவியும் இன்றி பெற்றெடுத்துள்ளார் என்பதே ஆச்சரியம்.
அதாவது அவர் கர்ப்பிணியான காலம் முதல் மருத்துவரை அணுகவோ அல்லது ஸ்கேன் செய்யவோ என எதுவும் மேற்கொள்ளவில்லை. மருத்துவர்களின் உதவி இன்றியே குழந்தை பெற்றும் உள்ளார்.
ஜோசிக்கு பிரசவ வலி வரப்போகிறது என தெரிந்ததும், அவரது குழந்தைகள் நண்பர்களுடன் தங்க வைக்கப்பட்டனர். அவரது கணவர், ஜோசியை வாகனத்தில் அழைத்து கொண்டு பீச்சுக்கு சென்றுள்ளார். உடன் துண்டுகள், நஞ்சுக்கொடியை எடுக்க பயன்படுத்த சல்லடை, ஒரு கிண்ணம், துணி வலை மற்றும் காகித துண்டுகள் உள்ளிட்ட குழந்தை பிறப்புக்கான உபகரணம் ஒன்றும் எடுத்து சென்றுள்ளார்.
அலைகளின் ஓசை உண்மையில் என்னை நன்றாக உணர செய்தது என கூறுகிறார். இதுபற்றி அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், பசிபிக் சமுத்திர கடலோரம் பிரசவத்திற்கு முன் அமர்ந்து இருப்பது போன்றும் மற்றொரு வீடியோவில், தொப்புள் கொடியுடன் புதிதாக பிறந்த தனது மகனை கையில் வைத்திருக்கும் காட்சிகளும் உள்ளன.
இந்த முறையில் குழந்தை பெற்றெடுத்ததற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்தபோதிலும், ஒரு சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.