மருமகளை நிர்வாணப்படுத்தி.. உடல் முழுவதும் சாம்பல் பூசி சித்ரவதை செய்த மாமியார்! வெளியாகும் திடுக்கிடும் தகவல்
இந்தியாவில் ஆண் குழந்தை வேண்டி மாமியார் தனது மருமகளை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த பெண்ணிற்கு அதே பகுதியை சேர்ந்த ஆணுடன் பெற்றோர் முன்னிலையில் 8 வருடம் முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ஆண் வாரிசு பிறக்காததால் அவரது கணவர் மற்றும் மாமியார் ஒன்று சேர்ந்து அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதையடுத்து பல முறை வரதட்சணை கேட்டு அவரது பிறந்த வீட்டிற்கு விரட்டி அடித்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆண் குழந்தை வேண்டும் என்று அப்பெண்ணை கட்டாயப்படுத்தி மந்திரவாதியிடம் அழைத்து சென்று சூனியத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.
அப்பெண்ணை மந்திரவாதி முன் நிற்கவைத்து நிர்வாணப்படுத்தி உடல் முழுவதும் குங்குமம், சாம்பல், மஞ்சள் போன்றவற்றை பூசி பூஜை நடத்தியுள்ளனர். மேலும் குறிப்பிட்ட பெண்ணின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமியார் மற்றும் கணவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.