பிறந்து 15 நாள் ஆன குழந்தையை ஃப்ரிட்ஜில் வைத்த தாய்.., பின்னால் இருக்கும் அதிர்ச்சி காரணம்
தாய் ஒருவர் பிறந்து 15 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன காரணம்?
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், மொரதாபாத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பாக குழந்தை பிறந்தது.
இந்த குழந்தை இரவு நேரத்தில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது தாய் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் கொண்டு வைத்துள்ளார். பின்னர் அவர் அதனை மறந்து விட்டார்.
இதையடுத்து, குளிர் தாங்க முடியாமல் குழந்தை அழுத நிலையில் குடும்பத்தினர் தேடியுள்ளனர். பின்னர், குளிர்சாதன பெட்டியில் குழந்தை இருப்பதை கண்டுபிடித்த அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின்னர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது தாய்க்கு பிரசவத்திற்கு பிறகு மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |