கொரோனா தடுப்பூசியில் இருந்து தப்பிக்க பெண் செய்த செயல்! பிரபல நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ஸ்பெயின் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இருந்து தப்பிக்க தனது மகன்களை தாயார் கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகின்றது. இதையடுத்து பல நாடுகளில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து புதிதாக தோன்றிய Omicron, டெல்டா வைரஸை பின்னுக்கு தள்ளி பாதிப்பு விகிதத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதையடுத்து கொரோனாவை எதிர்த்து போராடும் பேராயுதமாய் தடுப்பூசி மட்டுமே செயல்பட்டு வருகின்றது. பெரியவர்களை தொடர்ந்து சில நாடுகளில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஸ்பெயினில் 46 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார்.
அந்த பெண்மணி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்ற நிலையில் இரண்டு மகன்களும் தந்தையின் அரவணைப்பில் உள்ளனர். அந்த பெண் தனது மகன்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபடுவதை தடுக்க அவர்களை பள்ளியில் இருந்து கடத்தி சென்றுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் கூறியதாவது, தனது பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமா, கூடாதா என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என கணவருக்கு கடிதம் எழுதி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த நபர் தனது மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பொலிஸ் இரண்டு மகன்களையும் மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர்.