தந்தைக்கு ஆதரவாக பேசிய மகளை படுகொலை செய்த தாயார்: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம்

Crime India Husband and wife dispute Mum killed saughter
By Balakumar Apr 08, 2021 06:30 PM GMT
Report

  இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தைக்கு ஆதரவாக இருந்த 3 வயது குழந்தையை, பெற்ற தாய் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் நகர்பவி பகுதியில் உள்ள பிடிஏ லேஅவுட் பகுதியில் உள்ள கட்டுமானப்பணி நிறைவடையாத குடியிருப்பு ஒன்றில் கடந்த செவ்வாயன்று இரவில் இந்த துயர சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

அடுத்த நாள் காலையில் அந்த இடத்தில் குழந்தையின் சடலத்தை பார்த்த வழிப்போக்கர் ஒருவர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே இந்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

மல்லத்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண் சுதா, இவர் நகரில் உள்ள டைல்ஸ் கடை ஒன்றில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அவருடைய கணவர் ஈரண்ணா தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களின் ஒரு மகள் 3 வயதாகும் வினுதா. 

கடந்த செவ்வாய்க்கிழமையன்று மதியம் 2 மணியளவில் ஈரண்ணா மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்திருக்கிறார், அப்போது அவருடைய மகள் வினுதா தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். உடனே டிவியின் ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றிய ஈரண்ணா, செய்திச் சேனல் ஒன்றை மாற்றியிருக்கிறார்.

எந்நேரமும் செய்தி சேனல்களை பார்ப்பதா என கோபம் கொண்ட அவருடைய மனைவி ஆத்திரம் அடைந்து கணவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். எப்போதும் செய்தி சேனல்களை மட்டுமே பார்ப்பதாக இருந்தால் வீட்டுக்கே வரவேண்டாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

பெற்றோரின் சண்டையினை இடைமறித்த அவரது குழந்தை தந்தைக்கு ஆதரவாக தாயிடம் பேசியிருக்கிரார். அப்பாவே டிவி பார்க்கட்டும், அம்மாவிற்கு பைத்தியம் பிடித்து விட்டது என அக்குழந்தை தெரிவித்ததால் கடும் கோபமடைந்த தாய் சுதா தன்னிலை இழந்து பிஞ்சுக் குழந்தையை கொலை செய்திருக்கிறார்.

ஆனால் குழந்தையை கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல ஜனபாரதி காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் கொடுத்திருக்கிறார் சுதா.

மல்லத்தஹள்ளி அருகே கடை ஒன்றில் சாட் உணவுகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தனது மகள் தொலைந்து போனதாக அவர் புகார் கொடுத்திருந்தார்.

இதனிடையே குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், மகளை காணவில்லை என புகார் கொடுத்த பெற்றோரை வரவழைத்து விசாரித்த போது தனது குழந்தையை ஆத்திரத்தில் கொலை செய்ததை அந்தத் தாய் ஒப்புக்கொண்டார்.

பெற்ற மகள் என்றும் பாராமல் தாயே குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US