5 வயது மகனை சித்திரவதை செய்து கொன்ற கொடூர தாய்! உடலை அப்புறப்படுத்திய சகோதரன்
அமெரிக்காவில் 42 வயது பெண்ணொருவர் தனது ஐந்து வயது மகனை கொடூரமாக கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
முதல் நிலை கொலை
இல்லினாய்ஸைச் சேர்ந்த 42 வயது பெண் ஜென்னி பெர்ரி, தனது மகன் தமாரியை (5) கொன்றதற்காக முதல் நிலை கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். 
இந்த சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்துள்ளது. அப்போது சிறுவன் காணாமல்போனதாக குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து 2022 பிப்ரவரி மாதம் ஜென்னி மீதும் அவரது மற்றொரு ஜெரேமியா மீதும் கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
விதிவிலக்காக கொடூரமானவை
தமாரியன் மரணத்திற்கான சூழ்நிலைகள் 'விதிவிலக்காக கொடூரமானவை' என்று நடுவர் மன்றம் குறிப்பிட்டது. 
கொல்லப்பட்ட தனது சகோதரனின் உடலை ஜெரேமியா மாநில எல்லைகளுக்கு அப்பால் கொண்டு சென்று எரித்து, பின்னர் உடலை ஒரு பிளாஸ்டிக் குப்பைப் பையில் சுற்ற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டதாக லேக் கவுண்டி கரோனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிறுவன் தமாரி தனது ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாடத் தயாராக இருப்பதற்கு ஒருநாள் முன்பு (டிசம்பர் 29, 2021) இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையில் தமாரியின் மரணத்திற்கு காரணம் தாழ்வெப்பநிலை என்று கண்டறியப்பட்டது. அவனது உடலில் காயங்கள் மற்றும் பகுதியளவு உறைந்த உள் உறுப்புகள் இருந்தன. இதன்மூலம் அவன் Cold Showerயில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில், ஜென்னி பெர்ரியின் சிறைத்தண்டனை 45 ஆண்டுகளாக குறைக்கப்படும் என்றும், முதல் நிலை கொலைக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |