மிஸ் ஜேர்மனி பட்டம் வென்று அசத்திய இரண்டு குழந்தைகளின் தாய்!
ஜேர்மனியில் நடைபெற்ற ஒரு மாறுபட்ட அழகிப் போட்டியில் 2 குழந்தைகளுக்கு தாயான 33 வயது பெண் 'மிஸ் ஜேர்மனி 2021' பட்டத்தை வென்றுள்ளார்.
ஜேர்மனியில் “Empowering Authentic Women" என்ற தலைப்பில் 18 முதல் 39 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் 33 வயதான Anja Kallenbach பட்டத்தை வென்றார்.
இந்தப் போட்டி வழக்கமான அரைகுறை ஆடைகள் அணிந்து அழகிய தோற்றத்தை மட்டும் மதிப்பிடும் போட்டியாக இல்லாமல், பெண்களின் நம்பிக்கை மற்றும் தனித்துவமான ஆளுமை திறன்களை மதிப்பிட்டு நடத்தப்பட்டுள்ளது, போட்டியின் அமைப்பாளர்கள் தெறிவித்துள்ளனர்.
இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான Anja Kallenbach ஏற்கெனவே Miss Thuringia என்ற உள்ளூர் அழகிப் போட்டியில் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.