ஒரே ஒரு சிறு தவறு... 344 மில்லியன் டொலர் லொட்டரி பரிசில் பெருந்தொகையை இழந்த தாயார்
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தை சேர்ந்த ஒற்றை தாயார் ஒருவர் லொட்டரியில் சாதனை தொகையை வென்ற நிலையில், அவரது தவறான முடிவால் பெருந்தொகையை இழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
$688 மில்லியன் பவர்பால் லொட்டரி
அயோவா மாகாணத்தின் Redfield பகுதியை சேர்ந்தவர் லெரின் வெஸ்ட் என்ற ஒற்றை தாயார். 2018 அக்டோபர் மாதம் $688 மில்லியன் பவர்பால் லொட்டரி பரிசை வென்ற இருவரில் லெரின் வெஸ்ட்டும் ஒருவர்.
இன்னொருவர் நியூயார்க் சிட்டி பகுதியை சேர்ந்தவர் என லொட்டரி நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் லெரின் வெஸ்ட் என்பவருக்கு தனது லொட்டரி பரிசை பெற்றுக்கொள்ள இரண்டு தெரிவுசெய்யும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது 344 மில்லியன் டொலர் தொகையை 30 பங்காக அடுத்த 29 ஆண்டுகளாக பெற்றுக்கொள்ளலாம் என்பது முதல் வாய்ப்பு. இரண்டாவதாக தேசிய மற்றும் மாகாண வரிகள் போக எஞ்சிய 140.6 மில்லியன் டொலர் தொகையை மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம்.
இதில் தீவிர ஆலோசனைக்கு பிறகு, லெரின் வெஸ்ட் இரண்டாவது தெரிவை பயன்படுத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதாவது 344 மில்லியன் டொலர் தொகையை பரிசாக வென்றும், பாதிக்கும் குறைவான தொகையை பெற்றுக்கொள்ள லெரின் வெஸ்ட் முடிவு செய்துள்ளார்.
ஓய்வு பெறும் ஒரு வாரம் முன்னர்
51 வயதான லெரின் வெஸ்ட் மருத்துவ காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர், ஓய்வு பெறும் ஒரு வாரம் முன்னர் தான் பெருந்தொகையை லொட்டரியில் வென்றுள்ளார்.
@AP
மூன்று பிள்ளைகளின் தாயாரான வெஸ்ட் ஒருமுறை தமது சகோதரியுடன் வெளியே சென்ற நிலையில், உணவுக்காக காரை நிறுத்தியவர்கள், லொட்டரி ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் அந்த வாகனத்திலேயே அந்த லொட்டரி சீட்டை மறந்து விட்டுவிட்டனர்.
குலுக்கல் அன்று, அயோவா மாகாணத்தில் ஒருவர் சாதனை தொகையை வென்றுள்ளார் என அறிவிப்பு வெளியான பின்னர் தான் லெரின் வெஸ்ட் தாம் வாங்கிய லொட்டரி சீட்டை தேடியுள்ளார்.
இறுதியில் தமது சகோதரிக்கு தகவல் தெரிவித்து, அவரின் வாகனத்தில் இருந்தே லொட்டரி சீட்டு கண்டெடுக்கப்பட்டது.
அயோவா மாகாணத்தின் விதிகளின் படி, லொட்டரி வெற்றியாளர்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.