சகோதரியின் கருமுட்டை., தன்பாலின மகனின் குழந்தையை பெற்றெடுத்த தாய்: நெகிழவைக்கும் சம்பவம்
மகன் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதால் அவரது குழந்தையை தானே பெற்றுக் கொடுத்து நெகிழவைத்துள்ளார் ஒரு தாய்.
இந்த நிகழ்வில் இது மட்டும் சிறப்பு அல்ல, அந்தக் குழந்தைக்கான கருமுட்டை சகோதரியிடமிருந்த தானமாக பெறபட்டது என்பது குறிப்பித்தக்கது.
தலைசுற்றவைக்கும் கதை
இரண்டு ஆண்கள் (ஓரினசேர்க்கையாளர்கள்) திருமணம் செய்து, அதில் ஒருவர் கணவன் மற்றொருவர் மனைவி எனும் நிலையில், கவணனாக இருப்பவரின் சகோதரியிடமிருந்து கருமுட்டையை தானமாக பெற்று, அதில் மனைவியாக இருப்பவரின் விந்தணுவை செயற்கையாக செலுத்தி, அந்தக் கருவை மனைவியாக இருப்பவரின் தாயின் கருப்பைக்குள் வைத்து ஒரு குழந்தை பெற்றெடுக்கப்பட்டுள்ளது.
ARIEL PANOWICZ / WWW.ARIELPANOWICZ.COM
இப்படியொன்றை நீங்கள் இதுவரை கேள்விபட்டிருக்கமாட்டீர்கள். ஆனால் உண்மையாகவே நடந்திருக்கிறது.
தன்பாலின ஈர்ப்பாளர்கள்
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தைச் சேர்ந்த மேத்யூ எலெட்ஜ் (Matthew Eledge) ஒரு ஆசிரியராவர். அவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் (Gay) என்ற நிலையில், முடி அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த இலியட் டாஃபெர்ட்டி (Elliot Dougherty) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
தம்பதியாக வாழும் இரு ஆண்களும் சில மாதங்கள் கழித்து, தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கருத்தரிப்பு மையத்தில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றனர். அந்த ஆலோசனையின் அடிப்படையில் ஒரு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இருவரும் முடிவெடுத்தனர்.
ARIEL PANOWICZ / WWW.ARIELPANOWICZ.COM
அவர்கள் இருவரும் ஒமாஹாவில் வசித்து வந்த நிலையில், ஒருமுறை அருகில் வசித்து வந்த மேத்யூவின் தாய் செசிலியைச் சந்திக்கச் சென்றனர். அப்போது அவரிடமும் குழந்தை பற்றிப் பேசியுள்ளனர்.
சொந்த குழந்தையைப் பெற்றுக்கொள்ளவே விருப்பம்
இன்னொரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பதற்குப் பதிலாக தங்களது சொந்த குழந்தையைப் பெற்றுக்கொள்ளவே மேத்யூ மற்றும் டாஃபெர்ட்டி தம்பதியினர் விரும்பினர்.
ஆனால் அவர்கள் ஓரினசேர்கையாளர்கள் என்பதால் அது போன்ற குழந்தையை எப்படிப் பெற்றெடுப்பது? என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து மேத்யூ, தனது தாய் செசிலியுடன் ஆலோசித்த போது, மகனுடைய குழந்தையை அவரே பெற்றுத்தர சம்மதம் தெரிவித்தார்.
ARIEL PANOWICZ / WWW.ARIELPANOWICZ.COM
பின்னர் செசிலி எலெட்ஜ் பல்வேறு மருத்துவ ஆலோசனைகளில் பங்கேற்று, அவருக்கு ஏராளமான உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக, அவருடைய மகனின் குழந்தையை அவர் பெற்றுக்கொடுக்க மருத்துவர்கள் சம்மதித்தனர்.
மகனின் குழந்தைக்கு தாயான பெண்
இதையடுத்து செசிலியின் மகன் மேத்யூவிடமிருந்து விந்தணு பெறப்பட்டு, அவருடைய கணவர் டாஃபெர்ட்டியின் சகோதரியிடம் இருந்து கருமுட்டை பெறப்பட்டு செயற்கை கருவூட்டல் மூலம் கரு உருவாக்கப்பட்டது. பின்னர் அந்த கரு, செசிலியின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டது.
இறுதியில் ஓரினசேர்கையாளர் தம்பதியினரான மேத்யூ-டாஃபெர்ட்டிக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையின் பெயர் Uma Louise.
ARIEL PANOWICZ / WWW.ARIELPANOWICZ.COM
குழந்தையை பெற்றெடுக்கும்போது செசிலிக்கு வயது 59 என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது பெயர்த்தியை கருவில் சுமந்த தாயாகவும் அறியப்படுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |