லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய்
பிரித்தானியாவில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தை ஒன்று மூன்றாவது மாடியின் ஜன்னலில் இருந்து கீழே வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் பயங்கரம்
மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் கடந்த சனிக்கிழமை காலை பிறந்து 18 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று வெஸ்ட் மின்ஸ்டரின் கிரேட் பீட்டர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3 வது மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் மரியம் என்ற அந்த குழந்தை சுமார் 10 மீட்டர் (32 அடி) உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது.
குழந்தையின் தந்தை அவசர உதவிகளுக்கு இது தொடர்பாக காலை 7.30 மணியளவில் அழைப்பு விடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் குழந்தை சிமெண்ட் தரையில் மோதி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தலைக்காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி காலை 9 மணியளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
தாய் மீது குற்றச்சாட்டு
இந்த சம்பவத்தில் 43 வயது தாய் ஜாஹிரா பிஜாவேன் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |