3 நாள் சாப்பிடாமல் அடம்பிடித்த மகனுக்கு ஐபோன் வாங்கி கொடுத்த பூ விற்கும் தாய்.., விமர்சிக்கும் நெட்டிசன்கள்
தனது மகன் 3 நாட்கள் சாப்பிடாமல் அடம்பிடித்ததால் பூ விற்பனை செய்யும் தாய் ஒருவர் அவருக்கு ஐபோன் வாங்கி கொடுத்துள்ளார்.
தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போனை (smart phone) பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போனை நாம் பயன்படுத்துகிறோம் என்று சொல்வதை விட ஸ்மார்ட்போன் தான் நம்மை பயன்படுத்துகிறது என்று சொல்லும் அளவுக்கு உலகம் வந்துவிட்டது.
அதிலும், இளைஞர்களுக்கு மத்தியில் ஐபோன் மோகம் அதிகரித்துள்ளது. எப்படியவாது அதனை வாங்கி கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். அந்தவகையில், சாப்பிடாமல் பட்டினி கிடந்து இளைஞர் ஒருவர் ஐபோன் வாங்கியுள்ளார்.
வைரலாகும் வீடியோ
மொபைல்கடையில் ஐபோன் (iphone) வாங்கிய மகன் மற்றும் அவரது தாயிடம் ஒரு நபர் பேட்டி எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவரது தாய் பேசுகையில், "நான் கோயிலுக்கு வெளியில் பூ விற்பனை செய்து வருகிறேன். எனது மகன் ஐபோன் வேண்டும் என்று 3 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்து அடம்பித்தார்.
This nithalla boy stopped eating food and was demanding iPhone from her mother.
— Incognito (@Incognito_qfs) August 18, 2024
His mother finally relented and gave him money to buy iPhone. She sells flowers outside a mandir.
Too much love will always destroy children. Parents should know where to draw the line.
This is… pic.twitter.com/govTiTKRAF
இதனால், நான் எனது மகனுக்கு ஐபோன் (iphone) வாங்குவதற்கு பணம் கொடுத்துள்ளேன். அந்த பணத்தை மீண்டும் சம்பாதித்து தரும்படி கூறியுள்ளேன்" என்றார்.
தற்போது, இந்த வீடியோ வைரலாகிய நிலையில் மகனின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |