கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்: ஆதரவு குரல் கொடுத்த ஹர்பஜன் சிங்
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் மம்தா பானர்ஜிக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கா் என்ற அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த வாரம் இரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவர், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது உடலை மீட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹர்பஜன் சிங் கடிதம்
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான ஹர்பஜன் சிங் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர், "கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை விவகாரத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்தால் அவர்கள் எப்படி தங்களது கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்ய முடியும்?
மருத்துவர்களுக்கு பாதுகாப்பான வீட்டையும், பணியிடத்தையும் அமைத்து கொடுப்பது நமது கடமை. குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை கொடூரமானதாக இருக்கவேண்டும்.
அப்போது தான் இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |