எரிமலை வெடித்து 13 பேர் மரணம்; சாம்பலில் தத்தளிக்கும் கிராமம்
இந்தோனேசியாவின் செமேரு எரிமலை வெடித்ததில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோசினேசியாவில் கிழக்கு ஜாவாவின் லுமாஜாங் மாவட்டத்தில் அமைந்துள்ள செமேரு எரிமலை உள்ளூர் நேரப்படி சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் வெடிக்கத் தொடங்கியது.
இந்தோனேசியாவின் மிக உயரமான எரிமலையான செமேரு பிரம்மாண்டமான சாம்பல் மேகங்களை உமிழத் தொடங்கியதைத் தொடர்ந்து மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மலையடிவாரப் பகுதிகளில் இருந்து வெளியேற தொடங்கினர்.
எரிமலை கண்காணிப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, எரிமலையில் இருந்த வெளிவந்த சாம்பல் மேகங்கள் 50,000 அடி உயரத்தை எட்டியது, அப்பகுதிகளில் சூரிய வெளிச்சம் கூட நுழையமுடியாமல் இருண்டு காணப்பட்டது.
தற்போது வெளியான ஒரு அறிக்கையில், இந்த எரிமலை வெடிப்பின் காரணமாக 13 பேர் உயிரிச்சந்ததாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர், அவர்களில் இருவர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மேலும் 900 பேர் அருகிலுள்ள பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எரிமலைக்கு அருகில் உள்ள வழித்தடங்களைத் தவிர்க்குமாறு அனைத்து விமான நிறுவனங்களையும் இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தியது.
செமேரு எரிமலை 12,060 அடி உயரத்தில் உள்ளது மற்றும் இந்தோனேசியாவின் கிட்டத்தட்ட 130 செயலில் உள்ள எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும்.
அப்பகுதியில், இடியுடன் கூடிய மழை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மக்களை வெளியேற்றும் முயற்சிகள் மேலும் தீவிரமடைந்தன.
மழை நீரில் சாம்பல்களும் குப்பைகளும் மலையடிவாரத்திற்கு இறங்கியதால், கிராமமே சாம்பலில் தத்தளித்துவருகிறது. மேலும், அப்பகுதியில் இருந்து அருகிலுள்ள மலாங் நகருக்குச் செல்லும் சாலை மற்றும் பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Photo: EPA
Photo: Reuters
Info saat ini bahwa jembatan Gladak perak putus. Tolong menginfokan kepada masyarakat yang akan melewati lokasi ini untuk berhati-hati pic.twitter.com/Cgap7SZwBz
— PRB Indonesia BNPB (Disaster Risk Reduction) (@PRB_BNPB) December 4, 2021
Upcoming Photos Credit: Getty Images




இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022